Sunday 15 September 2013

இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்



 இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்
(Schedule of the Constitution of India)

அட்டவணைகள்
(Schedules)
செயல்பாடு மற்றும் கொள்கை
(activity and policy)
முதல் அட்டவணை
(First Schedule)
28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் அடங்கிய பட்டியல்.
2-வது அட்டவணை
(Second Schedule)
குடியரசு தலைவா், மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மைய, மாநில சபாநாயர்கள், துணைச் சபாநாயர்கள், மாநிலங்களைத் தலைவா், துணைத் தலைவா், மாநில சட்ட மேலவையின் அவைத் தலைவா், துணைத் தலைவா், தலைமைத் தணிக்கையாளர் ஆகியோரின் ஊதியங்கள், படிகள் அளிப்பது பற்றியது.
3-வது அட்டவணை
(Third Schedule)
மத்திய/மாநில அமைச்சர்கள், சட்டமன்ற/நாடளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், தலைமைத் தணிக்கையாளர் போன்றோர்களின் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் மற்றும் உறதி மொழிகள் இதில் அடங்கும்.

4-வது அட்டவணை
(Fourth Schedule)
மாநிலங்களவை இட ஒதுக்கீடு, யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய இடங்கள் பற்றிய பட்டியல்.
5-வது அட்டவணை
(Fifth Schedule)
அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் பற்றியது.
6-வது அட்டவணை
(Sixth Schedule)
அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் பற்றியது.
7-வது அட்டவணை
(Seventh Schedule)
மத்திய அரசின் நேரடிப் பார்வையின் கீழுள்ள அதிகாரங்கள், அதிகார வரம்பு உரிமைகள், சட்டங்கள் பற்றிய 99 வகையான பிரிவுகளின் பட்டியலும், மாநிலப் பட்டியலில் 66 பிரிவுகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுவான 51 பிரிவுகளையும் உள்ளடக்கியது.

8-வது அட்டவணை
(Eighth Schedule)
இந்திய நாட்டின் அரசியலமைப்புப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளின் பட்டியலாகும்.
1.இந்தி, 2.தமிழ், 3.தெலுங்கு, 4.கன்னடம், 5.வங்காளி, 6.அஸாமி, 7.மராத்தி, 8.ஒரியா, 9.சிந்தி, 10.பஞ்சாபி, 11.சமஸ்கிருதம், 12.குஜராத்தி, 13.கஷ்மீரி, 14.உருது, 15.கொங்கனி, 16.மணிபுரி, 17.நேபாளி, 18.மலையாளம், 19.போடா, 20.டோக்ரி, 21.மைதிலி, 22.சந்தாலி.
9-வது அட்டவணை
(Ninth Schedule)
நில உச்ச வரம்பு, நில வரி, ரயில்வே துறை, தொழில் துறைகள் பற்றிய சட்டத் திருத்தங்கள் மற்றும் அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளால் இடப்படும் ஆணைகளும், உத்தரவுகளும் அடங்கியது.
10-வது அட்டவணை
(Tenth Schedule)
கட்சித் தாவலினால் உறுப்பினர்கள் பதவி இழக்கும் விதிமுறைகள் பற்றியது
11-வது அட்டவணை
(Eleventh Schedule)
இந்தியாவிலுள்ள பஞ்சாயத்து ஆட்சி முறைகள் பற்றிய விளக்கங்கள் அடங்கியது.
12-வது அட்டவணை
(Twelfth Schedule)
இது மூன்று வகையான நகராட்சிகள் பற்றியது. நகர் பஞ்சாயத்துகள், சிறிய நகரங்களுக்கான நகராட்சி சபைகள், பெரிய அளவிலான மாநகராட்சிகளின் செயல்பாடுகள், அதிகாரங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.





1 comments: